ஆடிப்பாவை போல
(உரையாடல் – 3)
‘ஆடிப்பாவை போல’ நாவலின் புதுமை பற்றி
தமிழவனுக்கும் கே. சேகருக்குமான மூன்றாவது உரையாடல் இது.
கேள்வி கேட்பவர் சேகர்.
கேள்வி: நாவலின் பின்னட்டையில் கிண்டில் வாசிப்பு வந்த பின்புள்ள தொழில்நுட்பத்
துக்குப் பொருத்தமான நாவல் வாசிப்புப்படி இந்த நாவல் அமைந்துள்ளது
என்ற குறிப்பு உள்ளதே.
பதில்: ஆமா. நாம் தொழில்நுட்பத்தைத் தவிர்க்கமுடியாது. டிஜிட்டல் தொழில்நுட்பம்
வந்தபின்பு பல பிரச்சனைகள் வந்துள்ளன.
கேள்வி: உதாரணமாக?.
பதில்: சமீபகாலங்களில் Fake News என்ற சொல் பிரபலமாகி உள்ளது. எது
‘உண்மையான தகவல்’ என்ற எதிர்வு (வேறுபாடு) பிரச்சனையாகி உள்ளது.
இந்த நாவலில் அகம் புறம் என்பது ‘எதிர்வு’ (Opposition) அல்ல; எதிர்வு
போன்றது. இந்த நுட்பமான சொல்லாடலைக் கவனிக்க வேண்டும். பழைய
மாதிரி நாவலின் முன்தீர்மானிப்பு எது? வெள்ளை – கறுப்பு என்பது போன்ற
எதிர்வு. இப்போது காலம் மாறிவிட்டது. ஒரு ‘முழுமை’ ‘முழுமை போன்றதாக’
மாறிவிட்டது. கொழுக்கட்டை போல நாவலையும் முழுங்க முடியும் என்று
நினைத்த காலம் மாறுகிறது. நாவல் சந்தேகத்தின் வழி முன்னேறுகிறது.
நம்பிக்கையின் (trust) வழியாக அல்ல.
கேள்வி: நிறைய புதிய விஷயங்களைச் சொல்லிவிட்டீர்கள். அதாவது இன்றைய
தொழில்நுட்பம், சமூக வலைத்தளங்கள் வழி பலவற்றைத் தீர்மானிக்கிறது.
அப்படி வலைத்தளத்தில் செயல்படுகிறவர்கள்கூட நாவல் என்றால் முழுசாகத்
தெரியவேண்டும். பெரிய ஒரு முழுக்கதை பெத்தம் பெரிசாக ஒரே ஓட்டமாய்
போக வேண்டும் என்று கருதுவதை நீங்கள் இந்த நாவலின் வடிவம் மூலம்
விமர்சிக்கிறீர்கள் என்று கூறலாமா?
பதில்: நாவல் வாசிக்கிறவன், நாளிதழ் வாசகன்போல நூல் ஆசிரியனை நம்பும்
காலம் இனி தேவையில்லை. யாரும் யாரையும் நம்பவேண்டாம். பொது
நம்பிக்கை என்பது தகர்ந்துவிட்டது. மாலையில் ஒரு செய்தி வருகிறது.
மறுநாள் காலையில் அது தவறு என்று வருகிறது. கமல் பி.ஜே.பிக்கு ஆதர
வாய் ஒரு கருத்தைச் சொல்கிறார். அவர் சொல்வது சரியா, தவறா என்ற
நம்பகம் நீக்கப்பட்டு, செய்தியைக் கேட்பவனின் முடிவு எடுத்தல் என்பது
முக்கியமாகிறது. இது மத்தியதரவர்க்க விளையாட்டு. ‘அந்த ஆள் அவரை
முன்னிறுத்திவிட்டார் பார்த்தாயா. நாம் நமக்கு வேண்டிய முடிவைத்தான் இனி
எடுக்க வேண்டும்’ என்று மறுநாள் வங்கியில் அலுவலுக்குச் செல்கிறவர் சொல்
கிறார். நம்பகம் என்ற தன்மை மாறுகிறது. இந்த நாவலிலும் வாசகர் நாவலை
கட்டமைக்கிறார். ஆரம்பத்தில் கொஞ்சநாள் தடுமாறுவார்கள். கிண்டில் வந்த
போது வாசிக்கத் தடுமாறியது போல. முதல் இயலைப் படிப்பவன் 2-ஆவதைத்
தேர்ந்தெடுக்க வேண்டுமா, 3ஆவதைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா என்று
யோசிக்கையில் அவன் மனதின் உள்தளத்தில் வாசிக்கிறவனின் நாவல் எழுதப்
படுகிறது. ஆசிரியன் வழியில்போய் சிந்திக்கும் பழைய முறை நம்பகமற்றது
ஆகிறது.
கேள்வி: இனி பழைய முறையில் எழுதப்படும் நாவல் மறைந்துவிடுமா?
பதில்: இல்லை. மறையாது. கிண்டிலில் நாவல் படிப்பவர்கள் வந்தபின்பு அச்சான
நாவல் மறைந்துவிட்டதா? இல்லையே. அதுபோல் இரண்டும் இருக்கும். நம்
முடைய சூழலில் இன்னும்கூட அழுத்தமாக இரண்டும் இருக்கும். பாலாவின்
கார்ட்டூன் பார்த்து ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஏன் கோபம் வந்தது? பிரதி
நிதித்துவப்படுத்தப்பட்ட ஆட்சிக்கெதிரான விமரிசனம் sexual tone எடுத்தது.
அம்மணமாய் படம் போடப்பட்டபோது ஒரு முழுப்பக்கக் கட்டுரையைவிட
அதிகம் பலமான விமரிசனமாகப்படுகிறது. இது கேலிச்சித்திரம் தானே என்று
ஆட்சியாளர் எடுக்கவில்லை. Content and expression புதுபொருள்
பெறுகிறது.
கேள்வி: நாம் மேலே பேசிக்கொண்டு வந்ததோடு பாலா விஷயம் எப்படிப் பொருந்து
கிறது.
பதில்: சொல்கிறேன். அம்மணப்படம் என்பது நெல்லையில் கந்துவட்டிக்காக
தற்கொலையின் குரூரத்தை மக்களுக்குக் காட்டிச் சிரிப்பை வரவழைக்
கிறது. மக்கள் – ஆட்சியாளர்கள் என்ற எதிரும் புதிருமான
அமைப்பு உருவாகிறது.
டிஜிட்டல் முறையில் படம் லட்சக்கணக்கானவர்களைச் சிரிக்க
வைக்கிறது. மேல் – கீழ் என்ற வைப்புமுறையின் எதிர்வு ஒரே நேரத்தில்
ஆட்டம் காணவும் செய்கிறது. அதேநேரத்தில் வலிமை பெறவும் செய்கிறது.
இதுதான் விநோதம். ‘உறுதி’ என்ற இடத்தில் ‘சந்தேகம்’ வருகிறது. ஆட்சி
யாளர்கள் பயப்படுகிறார்கள். இந்தச் சந்தேகத் தன்மைதான் இந்த நாவலின்
வாசிப்பை வேறுபடுத்துகிறது. உறுதியான இறுகிப்போன வாசகனுக்குச்
சந்தேகம் இல்லை. மகாபாரதக் கதையையோ, ராமாயணக் கதையையோ,
கண்ணகிக் கதையையோ, புதியதாகவே பழையதாகவோ, வாசிக்கும் வாசகன்
சந்தேகத்தால் அலைக்கழிக்கப்படமாட்டான். உறுதியாக இருப்பான். இவன்
பழைய வாசகன். கார்ட்டூனில் வரும் செக்ஸ் (அம்மணம்) வேறொரு விஷயத்
தையும் சுட்டுகிறது.
கேள்வி: அதாவது டிஜிட்டல் காலகட்டத்தில் எப்படிப் பழைய உணர்வு வெளிப்படு
கிறது.
பதில்: டிஜிட்டல் காலகட்டத்தின் சந்தேக உணர்வு மனதைப் பலவீனமாக்கும்போது
உள்ளிருந்து அடிப்படை உணர்வு sex உந்துதலைக் கொண்டு வருகிறது.
மிருகம் வெளிப்படுகிறது. எல்லா நவீன வெளிப்பாட்டுக்கும் உள் ஒரு
புராதனம் ஒளிந்து கொண்டுள்ளது. மோடி வந்ததும், ட்ரம்ப் வந்ததும் இந்த
இருண்ட பகுதியின் வெளிப்படல்தான். நாவலில் புறம்வழி நகரும் கதையி
(அரசியலில்)லும், அகம் கதையிலும் ஒரு அம்சம் பொது. குடும்பம். குடும்பம்
என்பது sex-யை negotiate பண்ணும் சமூக நிறுவனம்.
கேள்வி: பொன்வண்ணன் மனைவி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் புறம் கதையமைப்பில்
வருவது பற்றிச் சொல்கிறீர்களா?
பதில்: ஆமா. அதுபோல் அகம் கதையில் பல விஷயங்கள் குடும்பம் சார்ந்து வருகின்
றன. வின்சென்ட் அனாதை என்று குடும்பத்தின் இன்மைகூட நம்மால் சிந்திக்
கப்படவேண்டும். பொதுவாக ஒரு விஷயம். டிஜிட்டல் காலகட்டம் அங்கீகரிக்
கப்படவேண்டும். அது அறிவை விழிப்படையச் செய்கிறது. சந்தேகம் அதற்கு
முக்கியம். அது அகத்தையும் புறத்தையும் ஆட்டிப்படைக்கிறது.