.பெருமாள் முருகன் சம்பந்தப் பட்ட சர்ச்சை
இன்று பலர் பெருமாள் முருகன் பற்றிய சர்ச்சையைக் கவனிக்கிறார்கள்.தமிழிலக்கியத்துக்கு இச்சர்ச்சையால் என்ன பயன் கிடைக்கும் என்று பார்க்கவேண்டும். அதாவது பெருமாள் முருகன்
நல்ல மனிதர்; யாரையும் புண்படுத்திப் பேசாதவர்.தன் படைப்புப் பற்றிப்பேச்சு எழவேண்டும் என்று எந்த சீப்பான தந்திரங்களையும் செய்யாதவர்.அவரைப் பற்றிப் பேச்சு எழுந்துள்ளதே தவிர அவர் படைப்பு பற்றிப் பேச்சு எழவில்லை.இதை நாம் கனிக்கவேண்டும்.எனக்கு அவர் படைப்புப் பற்றிப் பேச்சு எழவேண்டும் என்றுஆசை.இன்று இந்து ஆங்கில இதழில் பால்சக்கரியா கேரளத்தில் கைவெட்டப்பட்ட ஒருவரைப்பற்றி எழுதி அவருடன் பெ.முருகனை ஒப்பிட்டுள்ளார். ”சிமியாட்டிக்ஸ்” (Semiotics)என்ற சிந்தனையில் ஒரு நிகழ்வைக் குறி( Sign ) ஆக்குவது பற்றிச் சிந்திப்பார்கள். உம்பெர்த்தொ எக்கொ என்ற இத்தாலிய நாவலாசிரியர்-பேராசிரியர் பற்றி அறிந்திருப்பீர்கள்.அவர் நவீன குறியியல் சிந்தனையைத் தொடங்கியவர் என்பார்கள். அவர் ஒரு நிகழ்வை அதன் வலயத்திலிருந்து மற்றி அதனை அடையாளத்தொகுப்பாக்கும் செயலை விளக்குவார்.ஒரு தமிழ்ப் படைப்பாளியை அவர் படைப்பைப் பற்றிப் பேசாமல் பிற எல்லா விசயங்களையும் பேசி அவரைசுற்றி ஒரு சொற்களாலான அடையாளக் குவியலை உருவாக்குகிறோம்.அவருடைய படைப்பே அவருக்கு மரியாதை தரும்.அதனைப் பற்றி பேசவேண்டும் நாம்.
2.இந்த ஆண்டுக்கான கன்னட இலக்கிய விழா .
இவ்விழாவில் நண்பர் தலித் கவிஞர் சித்தலிங்கையாவை அழைத்துத் தலைமை தாங்கக் கேட்டுள்ளார்கள்.அவரும் ஒத்துக்கொண்டுள்ளார்.ஏற்கனவே தலித் இலக்கியவாதி யும் இன்றைய முதல் அமைச்சருடன் அரசியலில் செயல்பட்டவருமான தேவனூர் மகாதேவையா தலைமைதாங்குவதற்கு மறுத்துள்ளார். ஏனெனில் கன்னடத்தைக் கட்டாய மொழியாகப் பள்ளிகளில் அறிவிக்கும் வரை அவர் விழாவில் பங்கெடுப்பதில்லை என எதிர்ப்பு த் தெரிவித்திருந்தார்.அதனால் அரசு சட்டத்திருத்தம் செய்து கன்னடம் கட்டாயம் என்று அறிவிக்க முன்று வருகிறது.
கவிதை வாசிப்பிற்கான மாதிரிகளாக கிடைக்கும் தமிழவனின் கட்டுரைகள் பிற பெரும்பாலான கவிதை விமர்சனக்கட்டுரைகளில் இருந்து வேறுபடுவதாகவும் ( அவ்வாறு வேருபடுபடுவன வற்றின் மீது பாதிப்பை செலுத்துவதாகவும் ) – கலையிலிருந்து சிந்தனைக்கு பெயர்க்கும் அறிவுசார் (கலையிலிருந்து கலைக்கு அல்ல )அனுபவத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன. மேலும் இவை ஒரு சராசரி தமிழ் மாணவனை ஒரு இலக்கிய மாணவனாக்கும் செயலை யும் செய்கின்றன என்பதிலிருந்து அவரை நல்ல விமர்சகனுக்கான முன்மாதிரியாக கொள்ளமுடியும்.
றாம் ஸந்தோஷ்